நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஐரோப்பிய நாடுகள் உத்தரவாதம் அளிக்காவிட்டால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து: ஈரான் தலைவர் அலி கமேனி அதிரடி 

ஐரோப்பிய நாடுகள் உத்தரவாதம் அளிக்காவிட்டால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று ஈரான் மூத்த தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 மே 2018, 7:28 pm IST

தெஹ்ரான்: ஐரோப்பிய நாடுகள் உத்தரவாதம் அளிக்காவிட்டால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று ஈரான் மூத்த தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டின் மீது கடந்த 2015-ம் ஆண்டு அணு ஆயுத சோதனைகளுக்கும் ஆயுதங்களின் பயன்பாட்டிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  இதற்கான தனியான அணு ஆயுத ஒப்பந்தம் முடிவான பின் அந்நாடு அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது பரவலாக குறைந்தது.  இதற்காக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிலான நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஆயினும் இந்த ஒப்பந்தத்தில் கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை திட்டம் உள்ளிட்ட சில விஷயங்கள்  குறித்து எதுவும் கூறப்படவில்லை.

இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறாத விசயங்களை சுட்டிக் காட்டி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் பதவியேற்ற பின், தொடர்ந்து ஈரானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். செவ்வாயன்று அவர் ஈரானுடனான சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று தன்னிச்சையாக அவர் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் உத்தரவாதம் அளிக்காவிட்டால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று ஈரான் மூத்த தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரான் தொலைக்காட்சியில் உரையாற்றிய போது அவர் கூறியதாவது:

ஈரானுடனான சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இருந்தாலும்  அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக  பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி  நாடுகள் கூறியுள்ளன. மேலும் தங்களது செயல்பாடுகளை தடுக்க வேண்டாம் என இந்நாடுகள் அனைத்தும் அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளன.

வர்த்தக உறவுகளை தொடர்வோம் என்று ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு தீர்க்கமான உத்தரவாதம் அளிக்காவிட்டால், சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.