நைரோபி: கென்யாவின் நகுரு கவுண்டி மாகாணத்தில் புதனன்று அணை உடைந்த விபத்து ஏற்பட்டதில் 27 பேர் பலியாகினார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள நகுரு கவுண்டி மாகாணத்தில் படேல் என்ற அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டுவின் பாதுகாப்பு மதகுகள் புதனன்று மாலை உடைந்ததில், அணையில் இருந்த தண்ணீர் அதிக வேகத்தில் வெள்ளமாக பாய்ந்து வெளியேறியது.
இந்த தண்ணீர் பாய்ச்சலில் அணையின் கரையோரம் இருந்த நுற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. வீடுகளில் இருந்த மக்களும் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு படையினர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது வரை 27 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், நீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


