மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை நிறைவடையாமல் தாமதமாவதற்கு இந்தியாதான் காரணம் என்று அந்நாட்டு முன்னாள் உள்துறை அமைச்சர் நிஸார் அலி கான் தெரிவித்துள்ளார். வழக்கு தொடர்பாக எந்தவித ஆதாரங்களையும் இந்திய அரசு அளிக்க மறுத்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அண்மையில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், மும்பை தாக்குதல் சம்பவத்தில் அந்நாட்டுக்குத் தொடர்பு இருப்பதாக சூசகமாகத் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவதாகவும் கூறினார். இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.
இந்நிலையில், இதுதொடர்பாக இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் நிஸார் அலி கூறியதாவது:
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை பாகிஸ்தான் நீதிமன்றத்தில் முழுமையாக நிறைவடையாமல் நிலுவையில் உள்ளது. இதற்கு முழுக்க, முழுக்க பாகிஸ்தானே காரணம் என சித்திரிக்கப்படுகிறது. ஆனால், உண்மை நிலை அதுவல்ல. வழக்கு தொடர்பாக எந்த ஒத்துழைப்பையும் அளிக்காமல் பிடிவாதமாக இந்தியா இருந்து வருவதே அதற்கு காரணம்.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் 90 சதவீத ஆதாரங்கள் அனைத்தும் இந்தியா வசமே உள்ளன. ஆனால், அவற்றை பாகிஸ்தானிடம் இந்தியா இதுவரை அளிக்கவில்லை என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

