பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கியூபா விமான விபத்து: பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு

கியூபாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்தது.

News image
Updated On :20 மே 2018, 5:28 am

கியூபாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்தது.

கியூபாவிலுள்ள ஹவானா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 737 வகை பயணிகள் விமானம், சிறிது நேரத்திலேயே சான்டியாகோ டி லாஸ் வேகாஸ் விமானநிலையத்துக்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி 110 பேர் உயிரிழந்துள்ளதாக கியூபா போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர். தூரத்தில் இருந்து கறும்புகை வெளியானதைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது விமான விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

உடனடியாக பொதுமக்கள் மற்றும் அரசு மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் முழு வீச்சில் ஈடுபட்டது. சம்பவ இடத்துக்கு கியூபா அதிபர் மிகுல் டியாஸ்-கானில் நேரில் சென்று பார்வையிட்டார். விபத்து குறித்த காரணங்கள் இதுவரை தெரியவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.