மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கொரிய அதிபர்கள் இன்று மீண்டும் சந்திப்பு

வட மற்றும் தென் கொரிய அதிபர்கள் சனிக்கிழமை மீண்டும் திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

News image
Updated On :26 மே 2018, 2:48 pm

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர் சனிக்கிழமை திடீரென சந்தித்து சுமார் 2 மணி நேரங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இரு நாடுகளின் தலைவர்களும் எல்லையோரம் அமைந்துள்ள தென் கொரிய பகுதியில் சந்தித்துப் பேசினர். வட கொரிய அதிபர் தென் கொரிய எல்லையில் பேசுவது இதுவே முதன்முறையாகும். 

அமெரிக்கா மற்றும் வட கொரிய இடையேயான சந்திப்பு வெற்றிகரமாக அமைவது தொடர்பாகவே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தென் கொரிய செய்தி நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சந்திப்பின் முழுக் காரணம் மற்றும் சந்திப்பின் போது நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பான விவரங்களை தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவிக்கவுள்ளதாக தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், அதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், ஜூன் 12-ஆம் தேதிக்குள் இரு நாடுகளின் தலைவர்களும் சந்திக்க வாய்ப்புள்ளதாக டொனால்டு டிரம்ப் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.