ஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வுகமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பிரதமர் மோடி - அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்திப்பு 

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இருவரும் புதனன்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:37 pm

DIN

சிங்கப்பூர்: பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இருவரும் புதனன்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

சிங்கப்பூரில் தெற்காசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸும் கலந்து கொண்டுள்ளார். 

இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இருவரும் புதனன்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த சந்திப்பில் பாதுகாப்பு, வர்த்தக ஒத்துழைப்பு, தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும், இரு தரப்பு மற்றும் உலகளாவிய விவகாரங்களில் பரஸ்பர ஆர்வங்கள் பற்றி விரிவான அளவில் பேசப்பட்டது.
 
இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமுடன் அமைந்திருந்ததாக பின்னர் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாலர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.