சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

"பெய்டோ' தொழில்நுட்பம்: இரு புதிய செயற்கைக்கோள்களை செலுத்தியது சீனா

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் அமெரிக்காவின் "ஜிபிஎஸ்' தொழில்நுட்பத்துக்கு மாற்றாக, சீனா உருவாக்கியுள்ள "பெய்டோ' வழிகாட்டும் தொழில்நுட்பத்துக்கு (பிடிஎஸ்) வலு சேர்க்கும் வகையில், கூடுதலாக இரு

Published On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் அமெரிக்காவின் "ஜிபிஎஸ்' தொழில்நுட்பத்துக்கு மாற்றாக, சீனா உருவாக்கியுள்ள "பெய்டோ' வழிகாட்டும் தொழில்நுட்பத்துக்கு (பிடிஎஸ்) வலு சேர்க்கும் வகையில், கூடுதலாக இரு செயற்கைக்கோள்களை அந்த நாடு விண்ணில் செலுத்தியுள்ளது.
செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி, உலகம் முழுவதிலும் உள்ள சாலைகள், வழிகள், திசைகள், வாகனங்கள் உள்ளிட்டவை இருக்குமிடங்கள் போன்றவற்றை எளிதாக அறிந்து கொள்ள தற்போது "குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்' என்ற தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
அந்த வசதியை "கூகுள் மேப்' தொழில்நுட்பத்துடன் இணைத்து, யாரிடமும் வழி கேட்காமலேயே குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல முடியும். மேலும், வாடகைக் கார்கள் முதல் உணவுப் பதார்த்தங்கள் வரை இருந்த இடத்தில் இருந்துகொண்டே முன்பதிவு செய்து வரவழைக்க முடிகிறது.
எனினும், இந்த வசதிகளைப் பயன்படுத்த, அமெரிக்காவின் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தையே நம்பியிருக்க வேண்டியுள்ள நிலையில், அதனைப் போலவே செயற்கைக்கோள் மூலம் வழிகாட்டும் தொழில்நுட்பத்தை "பெய்டோ' என்ற பெயரில் சீனா உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.
அந்தத் தொழில்நுட்பத்துக்காக பல செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் திறனை மேம்படுத்துவதற்காக மேலும் இரு செயற்கைக்கோள்களை சீனா திங்கள்கிழமை விண்ணில் செலுத்தியது.
அந்த நாட்டின் ஜிசாங் ஏவுதளத்திலிருந்து, லாங் மார்ச்-3பி ராக்கெட் மூலம் இந்த இரு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.
சீன வர்த்தக வழித்தடத்தில் பங்கேற்கும் நாடுகளுக்கு தனது பிடிஎஸ்-3 தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு சேவைகளை அளிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.