காபூல்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் பயணம் செய்த வாகனத்தைக் குறிவைத்து தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பராஹ் மாகாணம். அங்குள்ள லஷ் வா ஜூவேன் மாவட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த தாலிபான் தீவிரவாதிகள் காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களை குறிவைத்து அதிபயங்கர தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி உட்பட 22 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் மாகாண காவல்துறை துணை தலைமை அதிகாரி உட்பட 5 அதிகாரிகள் பலத்த காயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ரூ. 34.79 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கான தீா்மானம் நிறைவேற்றம்

அழகான (அமைதியான) காஷ்மீர்!
லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

மீனாட்சி அபாரம்: காலிறுதிக்கு தகுதி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



