ஸ்டாக்ஹோம்: 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது லேசர் இயற்பியல் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள் முதல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவதாக திங்களன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டியினர் இதனை வெளியிட்டனர்.
இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது லேசர் இயற்பியல் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு சற்றுமுன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸின் ஜெரால்டு மௌரோ மற்றும் கனடாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான டோனா ஸ்ட்ரிக்லாண்ட் ஆகிய மூவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது.
118 ஆண்டு கால் நோபல் பரிசு வரலாற்றில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் டோனா ஸ்ட்ரிக்லாண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



