தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பிகார் பாங்கிபூர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பிகார் மாநிலம், பாங்கிபூர் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது குறித்து...

Voting begins for Bankipur bypoll in Bihar

பிகார் பாங்கிபூர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது - கோப்புப்படம்

Published On :

பிகார் மாநிலம், பாங்கிபூர் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

பாஜக தேசிய தலைவரான நிதின் நபின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து தனது பிகார் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை ஜூலை 6 ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து இந்த தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. ஜூலை 13 ஆம் தேதி வேட்மனுக் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற ஜூலை 16 கடைசி நாள். ஜூலை 30 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் அறிவிப்பின்படி, இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் சுமார் 3.80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 422 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது; பதிவான வாக்குகள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இந்த இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நீரஜ் குமார் சின்ஹா உள்பட 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதன்முறையாக 'ஜன் சுராஜ்' கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.

நபின் கடந்த பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி வேட்பாளர் ரேகா குப்தாவை 50,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த தொகுதியைத் தக்கவைத்திருந்தார்.

1995-ல் 'பாட்னா மேற்கு' என்று அழைக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்த தொகுதியைத் தன்வசம் வைத்துள்ள பாஜக, இந்த முறை தனது இளைஞரணித் தலைவரான நீரஜ் குமார் சின்ஹாவை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது.

பாங்கிபூர் தொகுதியில் பாஜகவின் நீண்டகால ஆதிக்கத்திற்குச் சவால் விடுக்கும் வகையில் 'ஜன் சுராஜ்' தலைவர் பிரசாந்த் கிஷோர் களமிறங்கியுள்ளதால், இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குப்பதிவுக்கு முன்னதாக, ஆளும் பாஜகவின் தூண்டுதலின் பேரில் பிகார் காவல்துறை தனது ஆதரவாளர்கள் பலரைக் கைது செய்துள்ளதாக கிஷோர் குற்றம் சாட்டினார். பாங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திலே பாஜக இவ்வாறு செயல்படுவதாக அவர் கூறினார்.

Summary

Polling for the Bankipur Assembly by-election in Bihar began at 7 am on Thursday under tight security...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.