ஸ்டாக்ஹோம்: 2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசானது புரோட்டீன்கள் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள் முதல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவதாக திங்களன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பும், செவ்வாயன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டியினர் இதனை வெளியிட்டனர்.
இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசானது புரோட்டீன்கள் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜ் ஸ்மித், பிரான்ஸின் பிரான்செஸ் அர்னால்டு மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிகோரி வின்டர் ஆகிய மூவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது.
புரோட்டீன்கள் குறித்த புதிய ஆய்வுகளின் வழியாக மனித குலத்திற்கு உதவும் வகையில் உணவுப் பொருட்களை கண்டறிய உதவியதாக அவர்களுக்கு இந்த விருதானது பகிர்ந்து வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


