மர்ம நபர்களால் கடத்தப்பட்ட ஆப்ரிக்காவின் 'இளம் வயது கோடீஸ்வரர்' ! 

ஆப்ரிக்காவின் 'இளம் வயது கோடீஸ்வரர்' என்று அறியப்படும் மொஹம்மத் டியூஜி வியாழனன்று   மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.  
மர்ம நபர்களால் கடத்தப்பட்ட ஆப்ரிக்காவின் 'இளம் வயது கோடீஸ்வரர்' ! 
Published on
Updated on
1 min read

டோடோமா (தான்சானியா): ஆப்ரிக்காவின் 'இளம் வயது கோடீஸ்வரர்' என்று அறியப்படும் மொஹம்மத் டியூஜி வியாழனன்று   மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.   

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவைச் சேர்ந்தவர் மொஹம்மத் டியூஜி (43). இவரது சொத்துமதிப்பு இந்திய ரூபாயில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ஆகும். பிரபல வணிக பத்திரிக்கையான போர்ப்ஸ் இவரை தன்சானியாவின் ஒரே கோடீஸ்வரர் என்று தெரிவித்துள்ளது. அந்த பத்திரிகையானது 2017-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஆப்ரிக்காவின் 'இளம் வயது கோடீஸ்வரர்' என்று அவரை வர்ணித்துள்ளது. 

உள்ளூர் மக்களால் மோ என்று அழைக்கப்படும் இவர் தனது குடும்பத்தின் பரம்பரைத் தொழிலான சில்லறை வணிகத்தை, ஆப்ரிக்கா முழுமைக்கும் நடைபெறும் வகையிலான ஒரு தொழில் சாம்ராஜயமாக மாற்றினார். 

இவரது நிறுவனமானது உடைகள் தயாரிப்பு, மாவு ஆலைகள், மதுபானத் தயாரிப்பு மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி என்று பல்வேறு துறைகளிலும் கால்பதித்துள்ளது. அவர் ஆப்ரிக்காவின் ஆறு நாடுகளில் தனது வியாபாரத்தை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் மொஹம்மத் டியூஜி வியாழனன்று   மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

தான்சானியாவின் முக்கிய நகரமான தார் இ ஸலாம் நகரில் உள்ள விடுதியின் உடற்பயிற்சி கூடத்தில், வியாழன் காலை தனது வழக்கமான பயிற்சிகளை முடித்து விட்டு வெளியில் வரும் போது, முகமூடி அணிந்த மர்ம நபர்களால் அவர் கடத்தப்பட்டார். கடத்தல்காரராகள் வானை நோக்கிச் சுட்டபடியே அவரை கடத்தியுள்ளனர். அப்போது டியூஜி உடன் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடத்தல் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடையவர்களில் இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com