சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பாகிஸ்தான்: ஆப்கன் தலிபான்களின் முக்கியத் தலைவர் விடுதலை

ஆப்கன் தலிபான்களின் முன்னாள் துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதாரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 8:04 pm


ஆப்கன் தலிபான்களின் முன்னாள் துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதாரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.
கத்தார் நாட்டின் வேண்டுகோளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தையில் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி நியூஸ் நாளிதழ் திங்கள்கிழமை கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்த 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டபோது, அதன் 4 முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முல்லா அப்துல் கனி பரதார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படயெடுத்து தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, பாகிஸ்தானின் கராச்சி நகரில் பதுங்கியிருந்த அவரை பாதுகாப்புப் படையினர் கடந்த 2010-ஆம் ஆண்டு கைது செய்தனர்.
இந்த நிலையில், கத்தாரைச் சேர்ந்த தூதுக்குழுவினர் அண்மையில் பாகிஸ்தான் வந்து மூத்த தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, முல்லா அப்துல் கனி பரதாரை விடுதலை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வேண்டுகோளை ஏற்று தற்போது பரதார் விடுதல செய்யப்பட்டுள்ளார் என்று தி நியூஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட தலிபான் பயங்கரவாதிகளிலேயே, முல்லா அப்துல் கனி பரதார்தான் மிக உயர் நிலைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.