கொழும்பு: இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் 11-ஆவது பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச பதவிஏற்றுள்ளார்.
இலங்கையில் இலங்கை சுதநதிரா கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக் கட்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபட்சவின் புதிய கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றியது ஆளும் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது.
அத்துடன் சமீபத்தில் இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பு தன்னைக் கொலை செய்ய முயன்றதாக அதிபர் மைத்ரிபாலா சிரிசேனா பேசியது இருநாடுகளிடையேயான உறவில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அதனை இலங்கை அரசு மறுத்தது. இதன் காரணமாக மைத்ரிபாலா சிரிசேனா வருத்தத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தருணத்தில் வெள்ளியன்று ஆளும் கூட்டணியிலிருந்து இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக் கட்சி வெளியேறுவதாகக் கூறி ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து விட்டது.
இதனால் உண்டான குழப்பமான அரசியல் சூழ்நிலையின் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே பதவி நீக்கப்பட்டு, மகிந்த ராஜபட்ச புதிய பிரதமராகத் தேர்த்தெடுக்கப்பட்டார்.
அவர் உடனேயே இலங்கை அதிபரின் செயலகத்தில் இலங்கையின் 11-ஆவது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு பாஜகவின் சுப்ரமணியன் சுவாமி வாழ்த்தி தெரிவித்துளளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தரப் பிரதேசம்: ரயில் தண்டவாளத்தில் இருந்து மல்யுத்த வீரர் சடலமாக கண்டெடுப்பு

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


