ஆப்பிரிக்காவுடனான பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விருப்பம்: ஷி ஜின்பிங் உரை

சீன மற்றும் ஆப்பிரிக்கத் தொழில் முனைவோர்கள் மாநாடு இன்று (திங்கள்கிழமை) பெய்ஜிங்கில் துவங்கியது. 
ஆப்பிரிக்காவுடனான பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விருப்பம்: ஷி ஜின்பிங் உரை
Updated on
2 min read


சீன-ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள், தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகள் ஆகியோரின் உயர் நிலைப் பேச்சுவார்த்தையும், 6-ஆவது சீன மற்றும் ஆப்பிரிக்கத் தொழில் முனைவோர்கள் மாநாடும் இன்று (திங்கள்கிழமை) பெய்ஜிங்கில் துவங்கியது. 

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் இதில் கலந்துகொண்டு, “செல்வத்தை நோக்கி இணைந்து நடைபோடுவோம்”என்ற தலைப்பில், உரை நிகழ்த்தினார். 

மேலும்  அவர் கூறுகையில், "அடுத்த 3 ஆண்டுகளில் 8 துறைகளில் முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மேலும் நெருக்கமான சீன-ஆப்பிரிக்க பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்க சீனா பாடுபடும். இவை, சீன-ஆப்பிரிக்க உறவின் எதிர்காலத்துக்கு, வளர்ச்சி திசையைக் காட்டும்" என்றார் அவர்.

இந்த நடவடிக்கைகளுக்கு, மூன்று சிறப்புகள் உள்ளன. முதலாவது, சீன-ஆப்பிரிக்க மக்களின் நலன்கள் முதலிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது, ஆப்பிரிக்காவின் தற்சார்பு வளர்ச்சித் திறன் மேம்பாட்டுக்கு அவை துணை புரியும். மூன்றாவது, அவற்றின் மூலம் சீன-ஆப்பிரிக்க வளர்ச்சி நெடுநோக்கின் இணைப்பு, வலுப்படுத்தப்படும்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தில் ஆப்பிரிக்க நாடுகள் பங்கெடுப்பதை சீனா ஆதரித்து, ஆப்பிரிக்காவுடனான பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அவர் உரை நிகழ்த்தியபோது தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் ஜோஹன்னஸ்பர்க் உச்சி மாநாட்டில், சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதற்காக, பத்து முக்கிய ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் முன்வைக்கப்பட்டன. தற்போது வரை, இந்த திட்டப்பணிகள் மூலம், பல சாதனைகள் பெறப்பட்டுள்ளன. இவை, ஆப்பிரிக்க மக்களுக்கு நன்மை அளித்து வருகின்றன என்று ஷி ஜின்பிங் குறிப்பிட்டார்.

 சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் ஆழ்ந்த பாரம்பரிய நட்பு உள்ளது. தற்போது, இரு தரப்புகளும் கூட்டாக வளரும் நல்ல கூட்டாளிகளாக இருக்கிறனர் என்று அவர் கூறினார்.

 ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தின் முக்கியப் பகுதியாக, ஆப்பிரிக்கா திகழ்கின்றது. ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் சமத்துவ அடிப்படையில், கூட்டுக் கலந்தாய்வு மற்றும் கூட்டுக் கட்டுமானம் என்ற கொள்கையை நிலைநிறுத்தி, ஆப்பிரிக்க நாடுகளுடன் பன்முக இணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், கொள்கைத் துறை பரிமாற்றம், வசதிகளின் தொடர்பு, தங்கு தடையற்ற வர்த்தகம் முதலியவற்றைத் தூண்டி, தத்தமது நாட்டின் நிலைமைக்கு ஏற்ற தரமிக்க வளர்ச்சிப் பாதையை உருவாக்க வேண்டும் என்றும் சீனா விரும்புவதாக ஷி ஜின்பிங் தெரிவித்தார்.

 தவிர, ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் தொழில் முனைவோர்கள், சீனாவில் முதலீடு செய்வதை சீனா வரவேற்பதோடு. சீனத் தொழில் முனைவோர்கள் ஆப்பிரிக்காவில் அலுவலை வளர்ப்பதற்கும் ஊக்கம் அளித்து வருகின்றது என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். இந்நிலைமையில், சீன மற்றும் ஆப்பிரிக்க தொழில் முனைவோர்களுக்கு 4 ஆலோசனைகளை அவர் முன்வைத்தார். 

முதலாவதாக, சீனா மற்றும் ஆப்பிரிக்காவில் காலூன்றி நின்று, தொலைநோக்கு ரீதியில், சீன மற்றும் ஆப்பிரிக்க நாட்டு மக்களுடன் இணைந்து கூட்டாக வளர வேண்டும். இரண்டாவதாக, நவீன தொழில் நுட்ப சாதனைகளைப் பயன்படுத்தி, பாரம்பரிய தொழில்துறையை புதுப்பிப்பதோடு, நுண்ணறிவு தொழில் துறையின் வளர்ச்சியையும் தூண்ட வேண்டும். மூன்றாவதாக, சமூக கடமையை நிறைவேற்றி, உள்ளூர் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களுக்கு மதிப்பளித்து, தொழில் நிறுவனத்தின் நற்பெயருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com