அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக, வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் பலர் போர்க் கொடி உயர்த்தியுள்ளதாக, பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி எழுதியுள்ள கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் பெயர் வெளியிட விரும்பாத ஓர் அதிகாரி எழுதியுள்ள தலையங்க துணைக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
டிரம்ப் அரசில், அவரது தவறான கொள்கைகளுக்கு எதிராகத் திரண்டுள்ள அணியில் நானும் ஒரு அங்கம் ஆவேன்.
எங்களைப் பொருத்தவரை, அரசின் கொள்கைகளுக்கு எதிரான இடதுசாரி கிளர்ச்சிகளைப் போல் நாங்கள் கிளர்ச்சிகளை மேற்கொள்ளவில்லை.
அமெரிக்காவை வளமானதாகவும், வலிமையானதாகவும் ஆக்கும் அரசின் திட்டங்கள் வெற்றி பெற வேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம்.
அத்தகைய திட்டங்களை வெற்றியடைச் செய்வதே எங்கள் முதல் கடமை என்றும் கருதுகிறோம்.
ஆனால், அதிபர் டிரம்ப்போ நாட்டின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் வகையில் தொடர்ந்து நடந்து வருகிறார்.
அதன் காரணமாகத்தான், டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட பல உயரதிகரிகளே, அவருடைய அத்தகைய போக்குக்கு எதிராகச் செயல்பட்டு ஜனநாயகத்தை நிலைநிறுத்த உறுதிபூண்டுள்ளோம் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பெயரை வெளியிடாமல் அரசின் உயரதிகாரி ஒருவர் எழுதியுள்ள அந்தக் கட்டுரை தேசத் துரோகம் எனவும், கோழைத்தனமானது எனவும் அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
யார் அந்த உயரதிகாரி?
பொதுவாக, பெயர் குறிப்பிடாதவர்களின் கட்டுரைகளை நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் வெளியிடுவதில்லை.
எனினும், தற்போது அந்த நாளிதழ் அப்படியொரு கட்டுரையை வெளியிட்டுள்ளதால், அந்தக் கட்டுரையை எழுதிய உயரதிகாரி யாராக இருக்கும் என்பதை அறியும் ஆர்வம் அமெரிக்கர்களிடையே எழுந்துள்ளது.
எனினும், கட்டுரையை எழுதிய அதிகாரி யார் என்பது தங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றாலும், அந்தப் பெயரை வெளியிட முடியாது என்று நியூயார்க் டைம்ஸ்' திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை வகிக்கும் அந்த அதிகாரியின் பெயரை வெளியிட்டால், அரசுத் துறையில் பெரும் முடக்கம் ஏற்படும் என்றும் அந்த நாளிதழ் எச்சரித்துள்ளது.
நான்அவனில்லை'
நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியானதிலிருந்தே, துணை அதிபர் மைக்கேல் பென்ஸ்தான் அந்தக் கட்டுரையை எழுதியிருப்பார் என்று பரவலாக பேசப்பட்டது.

அவர் அடிக்கடி பயன்படுத்தும் அபூர்வமான லோட்ஸ்டார்' என்ற வார்த்தை அந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த சந்தேகம் வலுவடைந்தது.
எனினும், கட்டுரையை எழுதியது தாம் இல்லை என்று மைக்கேல் பென்ஸ் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பத்திரிகைகளில் துணை அதிபர் பென்ஸ் கட்டுரைகள் எழுதினால் தனது பெயரை வெளிப்படையாகத் தெரிவிப்பார்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 - இன்றைய நேரலை! (ஆக. 12)
அவைக்கு வர அமித் ஷாவுக்குத் துணிச்சல் இல்லை: ராகுல் விமர்சனம்!

அமைதிப்பேச்சு! ஈரானிய தலைவர்களுடன் பாக். அமைச்சர் சந்திப்பு!
சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்!
விடியோக்கள்

முதல்வரின் தீர்மானத்தை எதிர்க்கிறோம்! ஆனால் இதை ஆதரிக்கிறோம்! | EPS | ADMK | TVK



