இந்தோனேஷிய சுனாமி பேரழிவில் 50 பேர் மரணம், 350-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷிய சுனாமி பேரழிவில் 50 பேர் மரணம், 350-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Published on
Updated on
1 min read

இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் 10 கி.மீ. ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சுலாவெசி தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

சிறிது நேரத்தில் சுனாமி அலைகள் 2 மீட்டருக்கும் மேல் உயர்ந்து, கரை தாண்டி வாகனங்கள் உள்ளிட்ட பொருள்களை அடித்துச் சென்றன. மீட்புப் பணிகளை பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 

இந்த பேரழிவு காரணமாக 50 பேர் உயிரிழந்ததாகவும், 350-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாதிப்பு இன்னும் முழுமையாக அறியப்படாத நிலையில், உயிரிழப்புகளும், படுகாயங்களுடன் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com