திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

'ராயல் பைத்தான்'  வகை பாம்பை பேண்ட் பாக்கெட்டில் போட்டு திருடிச் சென்ற வாலிபர்  (வைரல் விடியோ)

வளர்ப்பு பிராணிகளுக்கான கடையில் இருந்து 'ராயல் பைத்தான்'  வகை பாம்பை பேண்ட் பாக்கெட்டில் போட்டு வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2019, 10:17 am

மிச்சிகன்: வளர்ப்பு பிராணிகளுக்கான கடையில் இருந்து 'ராயல் பைத்தான்'  வகை பாம்பை பேண்ட் பாக்கெட்டில் போட்டு வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக நகைக் கடை மற்றும் துணிக்கடை போன்ற இடங்களுக்குச் செல்லும் திருடர்கள் அங்குள்ள பொருட்களை யாருக்கும் தெரியாமல் திருடி தங்களது உடைமைகளுக்குள் மறைத்து வைத்து எடுத்துச் சென்று விடுவது உண்டு.

இத்தகைய திருட்டுகளில் ஈடுபடுவோரை அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் காட்டிக் கொடுத்து விடும்.

இந்நிலையில் வளர்ப்பு பிராணிகளுக்கான கடையில் இருந்து 'ராயல் பைத்தான்'  வகை பாம்பை பேண்ட் பாக்கெட்டில் போட்டு வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் ‘ஐ லவ் மை பெட்ஸ்’ என்ற வளர்ப்பு பிராணிகளுக்கான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சில நாட்களுக்கு முன்பு வந்த இளைஞர் ஒருவர் அங்கு கூண்டில் இருந்து 'ராயல் பைத்தான்' வகை மலை பாம்பு ஒன்றை திருடி தனது பேன்ட்டில் மறைத்து வைத்துக் கொண்டார்.

இவ்வகைப் பாம்புகள் விஷமற்ற வகையை சேர்ந்தது என்பதால், பண்டைய அரசர்கள் இதனை ஒரு ஆபரணம் போல தங்களின் மேல் அணிந்து கொள்வது வழக்கம். எனவேதான் இதற்கு ராயல் பைத்தான் என்று பெயராகும்.

அதன்பின் சிறிதுநேரம் அங்க சுற்றிக் கொண்டிருந்த அவர் பின்னர் மெதுவாக பாம்பினை கடத்தி கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். 

இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.