ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

போர் வெறியை ஏற்படுத்தி தேர்தலை வெல்ல நினைத்த பாஜக திட்டம் தோல்வி: இம்ரான் கான்

போர் வெறியை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றிபெற நினைத்த பாஜக-வின் திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார். 

News image
Updated On :6 ஏப்ரல் 2019, 12:16 pm

போர் வெறியை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றிபெற நினைத்த பாஜக-வின் திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

இந்தியாவில் போர் வெறியை ஏற்படுத்தி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று நினைத்த பாஜக திட்டம் தோல்விடைந்துவிட்டது. மேலும் இது அவர்களுக்கே எதிராகவும் அமைந்துவிட்டது.

பாகிஸ்தான் விமானப்படையின் அனைத்து எஃப் 16 ரக போர் விமானங்களும் பத்திரமாக இருப்பதை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். ஏனென்றால் உண்மை மட்டுமே எப்போதும் வெல்லும். அனைவரும் உண்மையாக நடந்துகொள்வது தான் சிறந்தது என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தானின் எஃப் 16 ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டியடித்தது. அப்போது பாகிஸ்தானின் ஒரு எஃப் 16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதை வீழ்த்திய அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், பாகிஸ்தான் விமானப்படையில் அனைத்து எஃப் 16 ரக போர் விமானங்களும் இருப்பதாக அமெரிக்க நாளிதழில் வெளியுறவுத்துறை கொள்கை தொடர்பான செய்தி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.