மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு பிறகு ரிலையன்ஸ் குழுமத்துக்கு 143 மில்லியன் யூரோ வரிவிலக்கு: பிரெஞ்சு நாளிதழ் தகவல்

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு பிறகு அனில் அம்பானியின் தொலைதொடர்பு குழுமத்துக்கு 143.7 மில்லியன் யூரோ வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரபல பிரெஞ்சு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :13 ஏப்ரல் 2019, 12:16 pm

PTI

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு பிறகு அனில் அம்பானியின் தொலைதொடர்பு குழுமத்துக்கு 143.7 மில்லியன் யூரோ வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரபல பிரெஞ்சு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக லே மாண்டே, சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

2015-ஆம் ஆண்டு இந்தியாவுடனான 36 ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு பிறகு பிரான்ஸில் செயல்பட்டு வரும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனத்துக்கு அந்நாட்டு அரசு 143.7 மில்லியன் யூரோ வருமானவரி விலக்கு அளித்துள்ளது. 

மொத்தம் 151 மில்லியன் யூரோக்கள் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலையன்ஸ் ஃபிளாக் அட்லான்டிக் பிரான்ஸ் நிறுவனம், பிரான்ஸ் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் 7.3 மில்லியன் யூரோ வரி செலுத்தியிருந்தது. பிரான்ஸ் நாட்டின் விதிகளின்படி உரிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தீர்வு ஏற்படுத்தப்பட்டு இந்த வரிவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இதில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் எவ்வித விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.