
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பிற்கு அருகே உள்ள தெஹிவாலாவில் ஏழாவது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகையினை ஒட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடியிருந்தனர்.
இந்நிலையில் ஞாயிறு காலை 8.45 மணியளவில் அங்குள்ள கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம், ஷாங்ரிலா, சினமான் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி நட்சத்திர விடுதிகளிலும் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
இந்த குண்டுவெடிப்பூக்களில் சுமார் 150 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பிற்கு அருகே உள்ள தெஹிவாலாவில் ஏழாவது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெஹிவாலாவில் உள்ள தாங்கும் விடுதி ஒன்றில் இந்த ஏழாவது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான மீட்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களின் காரணமாக அங்கு தொடந்து பதற்றம் நிலவி வருகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.