சிங்கமாக காட்டிக் கொள்ளும் இம்ரான்கான், மோடியிடம் பூனையாக மாறுகிறார்: பிலாவல் பூட்டோ 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல்சாசனத்தின் 370ஆவது பிரிவை இந்தியா கடந்த 5ஆம் தேதி ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீரை இரண்டு
சிங்கமாக காட்டிக் கொள்ளும் இம்ரான்கான், மோடியிடம் பூனையாக மாறுகிறார்: பிலாவல் பூட்டோ 



இஸ்லாமாபாத்: ஸ்ரீநகரை மறந்துவிட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அறிவுரை வழங்கி உள்ளன. 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல்சாசனத்தின் 370ஆவது பிரிவை இந்தியா கடந்த 5ஆம் தேதி ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. பாகிஸ்தானில் இருந்து வலுவான எதிர்வினைகளைத் தூண்டி உள்ளதால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இதை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

370வது பிரிவை ரத்து செய்திருப்பது உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா சர்வதேச சமூகத்திடம் திட்டவட்டமாக கூறியுள்ளதுடன், யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி பாகிஸ்தானுக்கும் அறிவுறுத்தியது. 

இதற்கிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரே தங்களது அடுத்த இலக்காக இருக்கும் என்று சமீபத்தில் மத்திய அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஸ்ரீநகரை மறந்துவிட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை காப்பாற்றுவதில் கவனம் செலுத்து வேண்டும் என மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோ மகனும், எதிர்க்கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரான பிலாவல் பூட்டோ கூறியதாவது: 

இம்ரான்கான் அரசாங்கத்தின் திறமையின்மை காரணமாக பாகிஸ்தான் "காஷ்மீரை இழந்தது" என்றும், காஷ்மீர் விவகாரத்தில் இம்ரான்கானின் அரசு ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துவிட்டது. இந்த அரசு தூங்கிக்கொண்டு இருக்கிறது. தற்போது காஷ்மீர் பிரச்னையை மறந்துவிட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மட்டுமாவது (முசபராபாத்) எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதில் இம்ரான்கான் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்துவிட்டது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருந்தது பிரதமர் இம்ரான்கானுக்கு தெரியும். ஆனால் இதற்கு முன்னர் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். 

மேலும், எதிர்க்கட்சிகளிடம் தான் ஒரு சிங்கம் என்று காட்டிக் கொள்ளும் இம்ரான்கான், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னால் பயமுறுத்தும் பூனையாக மாறுகிறார்" என்று  பிலாவல் பூட்டோ கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com