ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவின் இந்தியப் பயணம் ஒத்திவைப்பு
வட இந்திய மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை அடுத்து, ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


டோக்யோ: வட இந்திய மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை அடுத்து, ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபே டிசம்பர் 15 - 17ம் தேதிகளில் அரசு முறைப்பயணமாக இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்தார். அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச திட்டமிட்டிருந்தார். இந்த சந்திப்பு குவகாத்தியில் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வட இந்திய மாநிலங்களில் கடும் போராட்டம் வெடித்துள்ளதால், பாதுகாப்புக் கருதி, ஷின்ஸோ அபேவின் பயண தேதி மாற்றப்பட்டுள்ளது.
இரு நாட்டு அதிகாரிகளும் பேசி, விரைவில் புதிய தேதியை அறிவிப்பார்கள் என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...