பாகிஸ்தானில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து
இன்று காலை பாகிஸ்தானின் கராச்சி-ராவல்பிண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 65 பயணிகள் உயிரிழந்தனர்.


இன்று காலை பாகிஸ்தானின் கராச்சி-ராவல்பிண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 65 பயணிகள் உயிரிழந்தனர்.

அதிகாலை லியாகத்பூர் எனும் இடத்தை இந்த ரயில் கடந்து கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. வேகமாகப் பரவிய தீ அடுத்தடுத்த பெட்டிளுக்கப் பரவியது. இந்த அபாய நிலையில் உடனே ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் கடும் அச்சத்துக்கு உள்ளாகி தப்பி வெளியேறினர். ஆனால் சிலர் வெளியேற முடியாமல் தீயில் சிக்கினர்.

சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் விரைந்தனர். தீயை கட்டுப்படுத்தி, விபத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் 65 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...