பாகிஸ்தானில் ஹிந்து கோவில் சேதம்: சிலைகள், புனித நூல்கள் தீயிட்டு எரிப்பு 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து கோவில் ஒன்று விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டு, அங்குள்ள சிலைகள் மற்றும் புனித நூல்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் ஹிந்து கோவில் சேதம்: சிலைகள், புனித நூல்கள் தீயிட்டு எரிப்பு 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து கோவில் ஒன்று விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டு, அங்குள்ள சிலைகள் மற்றும் புனித நூல்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தென் பகுதியில் கைர்புர் மாவட்டத்தில் கும்ப் நகரத்தில் ஷாம் சுந்தர் சேவா மண்டலி என்னும் ஹிந்துக் கோவில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் ஹிந்து மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. அவர்கள் மத்தியில் இந்தக் கோவில் புகழ்பெற்ற ஒன்றாகும்.

இந்நிலையில் ஞாயிறு மாலை உள்ளூர் நேரப்படி 6 மணியளவில் இந்தக் கோவிலில் விஷமிகளிருவர் உள்ளே புகுந்து கோவிலை சேதப்படுத்தி உள்ளனர். அங்கிருந்த சிலைகளுக்கு தீ வைத்த அவர்கள், கோவிலின் உள்ளே தனி அறைகளில் வைக்கப்பட்டிருந்த பகவத் கீதை, குரு கிரந்த சாஹிப் உள்ளிட்ட புனித நூல்களையும் தீக்கிரையாக்கியுள்ளனர். மிகச் சில நிமிடங்களில் இதனைச் செய்த அவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவலர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அத்துடன் மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள ஹிந்து மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ஹிந்து கவுன்சிலின் ஆலோசகர் ராஜேஷ்குமார் ஹிர்தாசானி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com