இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
இந்தோனேசியாவின் சும்பா தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவாகி


சும்பா: இந்தோனேசியாவின் சும்பா தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சும்பா தீவின் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.29 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை சும்பாவின் வெயின்கபு நகரத்தில் வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்தோனேசியா, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு பகுதியான ரிங்க் ஆஃப் ஃபயர் என்ற இடத்தில் உள்ளது. இது அடிக்கடி நலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்து பகுதியாக உள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலை பாதிப்பில் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...