பெய்ஜிங்: சீனாவில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளின் ராணுவப் படைகளிலேயே அதிக ராணுவ வீரர்களை கொண்ட நாடாக சீனா விளங்கி வருகிறது. சீன ராணுவத்தில் சுமார் 20 லட்சம் தரைப்படை வீரர்கள் உள்ளனர்.
தற்போது சீன ராணுவத்தை நவீன மயமாக்குவது என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சீன ராணுவத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
அதேசமயம் நாட்டின் வடமேற்கு எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடற்படை, விமானப்படை ஆகியவற்றை விரிவுபடுத்த நவீன வசதிகளைச் சேர்க்கும் திட்டமும் சீனாவிடம் உள்ளது.
அத்துடன் தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணை பிரிவு போன்றவைகளும் நவீனப்படுத்தப்பட உள்ளது என்று சீன பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எங்க வீட்டுப் பையன், அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்: பிரேமலதா விஜயகாந்த்

முக்கிய ஆலோசனை! இபிஎஸ் இல்லத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

சொல்லப் போனால்... சந்திரசேகரன் ஜோசப் விஜய் ஆகிய நான்...

மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவா்: சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமனம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

