நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 90 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் பாய்ந்தோடும் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கன மழையால் 25 மாவட்டங்களிலுள்ள 10,385 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 90 பேர் உயரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.
இதுதவிர மேலும் 29 பேரைக் காணவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட 3,366 பேரை ராணுவத்தினரும், காவல்துறையினரும் மீட்டனர். மீட்புப் பணிகளில் 27,380 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலேரியா, டெங்கு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

மேலும் மழை பெய்யும் என வெள்ள முன்னறிவிப்புப் பிரிவு தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வெள்ள பாதிப்பு பகுதிகளில் நோய்கள் பரவுவதை தடுப்பதற்காகவும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்காகவும் சர்வதேச அமைப்புகளிடம் நேபாள அரசு நிதியுதவி கோரியது. இதையடுத்து உதவ முன்வருவதாக சர்வதேச அமைப்புகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


