துபாய்: துபாயில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த எட்டு இந்தியர்கள் உட்பட 17 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாயில் ஐ ரஷிதியா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே பேருந்துகள் நுழைவதற்கு வசதி இல்லா குறுகிய சாலையில் நுழைந்த ஆம்னி பேருந்து, சாலையோரம் இருந்த தடுப்பில் வேகமாக மோதியதில் பேருந்தில் இருந்த 17 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
பலியானவர்களில் 8 பேர் இந்தியர்கள் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
பேருந்தில் 31 பேர் இருந்தனர். பேருந்து குறுகிய சாலைக்குள் நுழைந்தபோது, பக்கவாட்டில் இருந்த தடுப்பில் மோதியது. இதில், பேருந்தின் வலது பக்கம் முழுமையாக சேதம் அடைந்தது. இதில் வலது பக்கம் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த ராஜகோபாலன், பெரோஸ் கான் பதான், ரேஷ்மா பெரோஸ் கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்கவீட்டில், கிரண் ஜான்னி, வாசுதேவ், திலக்ராம் ஜவகர் தாகூர் என்பது தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


