வாக்குக்காக மக்களை பிரித்து, வெறுப்புணர்வு வளர்ப்பது மிக எளிய அரசியல்: யாரைச் சொல்கிறார் இம்ரான் கான்?

வாக்கு வங்கிக்காக, மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து, வெறுப்புணர்வை வளர்த்து அரசியல் செய்வது மிக எளிதானது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
வாக்குக்காக மக்களை பிரித்து, வெறுப்புணர்வு வளர்ப்பது மிக எளிய அரசியல்: யாரைச் சொல்கிறார் இம்ரான் கான்?


இஸ்லாமாபாத்: வாக்கு வங்கிக்காக, மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து, வெறுப்புணர்வை வளர்த்து அரசியல் செய்வது மிக எளிதானது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இம்ரான் கான், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் அரசியல், வாக்குக்காக மக்களை பிரித்தாள்வது போன்றவை மிக எளிதான அரசியல் என்று கூறினார்.

இந்த கூட்டம் நடைபெற்றது இந்திய எல்லையருகே உள்ள சிந்து மாகாணத்தில் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் நரேந்திர மோடியின் அரசியல். மனிதர்களை பிரித்தாள்வது, வெறுப்புணர்வை பரப்புவது போன்றவற்றை ஒரு தலைவர் செய்ய ஆரம்பித்துவிட்டால், அவருக்குக் கீழே இருப்போர் என்ன செய்வார்கள் என்பதை புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா முழுவதும் வாழும் காஷ்மீர் இளைஞர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரியும் என்று கூறியுள்ளார்.

இம்ரான் கானின் இந்த பேச்சுக்கு இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகத்திடம் இதுவரை எந்த பதிலும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com