தனது ஜீன்ஸைக் கருவியாகப் பயன்படுத்தி பசிபிக் கடலில் மூன்று மணி நேரம் தப்பிப் பிழைத்த இளைஞர் 

பசிபிக் கடலில் விபத்தில் சிக்கிக் கொண்ட போதும் இளைஞர் ஒருவர் தனது ஜீன்ஸையே கருவியாகப் பயன்படுத்தி, மூன்று மணி நேரம் தப்பிப் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது.
தனது ஜீன்ஸைக் கருவியாகப் பயன்படுத்தி பசிபிக் கடலில் மூன்று மணி நேரம் தப்பிப் பிழைத்த இளைஞர் 

வெல்லிங்டன்: பசிபிக் கடலில் விபத்தில் சிக்கிக் கொண்ட போதும் இளைஞர் ஒருவர் தனது ஜீன்ஸையே கருவியாகப் பயன்படுத்தி, மூன்று மணி நேரம் தப்பிப் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் அர்னி முர்க்கே (30).  இவர் கடந்த 6-ஆம் தேதி தனது சகோதரருடன் ஆக்லாந்தில் இருந்து பிரேசிலுக்கு பசிபிக் கடல் மார்க்கமாக, 12 அடி நீளமுள்ள தனது பாய்மரப் படகில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக உயர்ந்த அலை மட்டத்தின் காரணமாக அவர் தடுமாறி கடலில் விழுந்தார். அவரது சகோதரர் படகில் இருந்து வீசிய 'லைஃப் ஜாக்கெட்’ என்னும் உயிர் காக்கும் கருவியையும் அவரால் அடைய இயலவில்லை.

அப்போது கடுமையாக வீசிய காற்று மற்றும் அலைச் சீற்றத்தின் காரணமாக அவர் அடித்துச் செல்லப்பட்டார். நியூசிலாந்து கடற்கரையில் இருந்து 20 மைல்கள் தொலைவில் உள்ள தொலாகா வளைகுடா பகுதிக்கு சென்று விட்டார்.

அவரது சகோதரரிடம் இருந்து கிடைத்த தகவல் மூலம் மீட்பு படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் வந்து அவரை மீட்க மூன்று மணி நேரங்கள் ஆனது. ஆனாலும் இடைப்பட்ட காலத்தில் அவர் தனது ஜீன்ஸையே உயிர் காக்கும் கருவியாகப் பயன்படுத்தி, தப்பிப் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது.    

இதுதொடர்பாக நியூசிலாந்து செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

இதுபோல கடலில் ஆபத்துக் காலத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அமெரிக்காவின் 'சீல்' எனப்படும் சிறப்பு அதிரடிப் படையினர் ஜீன்ஸை பயன்படுத்தி உயிர் பிழைக்கும் யுக்தி எனக்கு அதிஷ்டவசமாகத் தெரிந்திருந்தது. நான் தப்பிப் பிழைத்ததற்கு அதுவே காரணமாகும்.

நன்றாக மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நான் அணிந்திருந்த ஜீன்ஸை கழற்றினேன். அதன் இரண்டு கால் பகுதிகளிலும் முடிச்சுக்களையிட்டேன்.அதன் மூலம் அதில் காற்று நிரம்பியது. பின்னர் அதை நீரில் இருந்துஎடுத்து மேல்பக்கமாக வைத்து காற்றை முழுவதுமாக நிரப்பினேன். பின்னர் அதை நீருக்கு அடியில் செலுத்தினேன். தற்போது எனக்கு ஒரு மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் கருவி கிடைத்து விட்டது. அதை பயன்படுத்தி ஹெலிகாப்டர் வரும் வரை மிதந்து கொண்டிருந்தேன்.

நீரில் சிக்கி இருந்த அந்த நேரத்தில் பிலிப்பைன்ஸில் எனது காதலியுடனிருக்கும் எனது 10 மாத குழநதையைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவளை தகப்பன் இல்லாதவளாக மாற்றி விடக் கூடாது என்ற எண்ணம்தான் எனக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக இருந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com