வட கொரியா அண்மையில் மேற்கொண்ட ஏவுகணை சோதனைகள் குறித்து தமக்கு அதிருப்தி எதுவுமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேவை நேரில் சந்திப்பதற்காக அந்த நாடு சென்றுள்ள அவர், பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக வெளியிட்ட சுட்டுரை (டுவிட்டர்) பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதாவது:
வட கொரியா சில சிறிய வகை ஆயுதங்களை அண்மையில் சோதித்துப் பார்த்தது.
அதுகுறித்து அமெரிக்காவில் ஒரு சிலர் அதிருப்தி தெரிவித்தனர். எனினும், எனக்கு அதுகுறித்து எந்த அதிருப்தியும் இல்லை.
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் என்னை நேரில் சந்தித்துப் பேசியபோது எனக்கு அளித்த வாக்குறுதிகளை கைவிட மாட்டார் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் அறிவித்த பிறகு, அவரை சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதமும், வியத்நாம் தலைநகர் ஹனோயில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமும் அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, வட கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்குவதற்கு கிம் ஜோங்-உன் சம்மதித்தார். எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாக விலக்கிக் கொள்ள டிரம்ப் திட்டவட்டமாக மறுத்ததால், ஹனோய் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
அதனைத் தொடர்ந்து குறு மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை வட கொரியா சோதித்தது. இந்த சோதனைகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகளுக்கு எதிரானது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் சாடியிருந்தார்.
இந்தச் சூழலில், வட கொரிய ஏவுகணை சோதனைகள் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியா் நலச் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு
மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் தந்தை கைது
பாவூா்சத்திரத்தில் போதைப் பொருள்கள் விற்பனை: அரசுப் பேருந்து நடத்துநா் உள்பட மூவா் கைது

குளச்சல் நகராட்சியில் உயா்த்தப்பட்ட குடிநீா் கட்டணம் நிறுத்தி வைப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



