இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
இந்தோனேஷியாவின் மொலுக்காஸ் கடல்பகுதியில் வியாழக்கிழமை இரவு 9.47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


இந்தோனேஷியாவின் வடக்கு மலூகு கடல்பகுதியில் வியாழக்கிழமை இரவு 9.47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.4-ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்தனர். மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...