விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சட்டவிரோத குடியேற்றம்: அமெரிக்காவில் 90 மாணவர்கள் கைது! பெரும்பாலானோர் இந்தியர் எனத் தகவல்!

சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த மாணவர்கள் 90 பேரை அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 

News image
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்
Updated On :28 நவம்பர் 2019, 1:11 pm

DIN

சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அடையாளம் காண, அமைக்கப்பட்ட போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த மாணவர்கள் 90 பேரை அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்கவும், ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றவும் அந்த நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அமெரிக்க அரசால் ஒரு போலி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்காணித்தது. அதன்படி, இந்தப் பல்கலைக்கழகத்தில்  பதிவு செய்த 161 மாணவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும், 90 மாணவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் இந்திய மாணவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இதுவரை 250 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 80% பேர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டதாகவும், எஞ்சிய மாணவர்கள் விரைவில் நாடு கடத்த அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பல்கலைக்கழகம் போலியானது என்று ஏற்கனவே மாணவர்களுக்குத் தெரியும் என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.