அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயகக் கட்சி போட்டியாளர்களிடையே விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக போட்டியிடுபவர்களிடையே 3-ஆம்கட்ட விவாதம் நடைபெற்றுள்ளது.
ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற  அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான ஜனநாயகக் கட்சிப் போட்டியாளர்கள்.
ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற  அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான ஜனநாயகக் கட்சிப் போட்டியாளர்கள்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக போட்டியிடுபவர்களிடையே 3-ஆம்கட்ட விவாதம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவில் வரும் 2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பிலான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இந்திய வம்சாவளி எம்.பி. கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. துளசி கபார்ட் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், போட்டியாளர்களுக்கு இடையிலான மூன்றாம்கட்ட விவாதம், டெக்ஸாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரிலுள்ள டெக்ஸாஸ் தெற்கு பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏபிசி தொலைக்காட்சி அந்த விவாதத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில், வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், மாஸசூùஸட்ஸ் எம்.பி. எலிசபெத் வாரன், வெர்மான்ட் எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் முதல்முறையாக ஒரே மேடையில் விவாதித்தனர். அவர்களுடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 
கலிஃபோர்னியா மாகாண எம்.பி. கமலா ஹாரிஸ் உள்ளிட்ட மேலும் 8 பேர் விவாதத்தில் பங்கேற்றனர்.
அதிபர் டொனால்ட் டிரம்ப்பைத் தோற்கடிப்பது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பொதுமக்கள் ஆயுதம் வைத்திருப்பதைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com