லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, மனிதர்களின் முன்னோடி இனமான டினிசோவன்கள், எந்த உருவத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதை இஸ்ரேல் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து செல் அறிவியல் நாளிதழில் கூறப்பட்டுள்ளதாவது:
லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நியாண்டர்தால்கள் போன்ற மற்றொரு மனித முன்னோடி இனமான டினிசோவன்கள் குறித்து இதுவரை மர்மம் நீடித்து வந்தது.
அந்த இனத்தின் ஒரு சுண்டுவிரல் எலும்பு, 3 பல்கள், ஒரு கீழ்த் தாடை எலும்பு ஆகியவை மட்டுமே கிடைத்துள்ளதால், டினிசோவன் மனிதர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்தது.
இந்த நிலையில், ஜெருசலேம் நகரிலுள்ள எபிரேய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அந்த எலும்புகளின் மரபணுக் கூறுகளை ஆய்வு செய்து டினிசோவன் மனிதர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
டினிசோவன்கள் மட்டுமன்றி, நியாண்டர்தால் மனிதர்கள், 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நவீன மனிதர்கள் ஆகியோரின் எலும்பு மாதிரிகளும் இத்தகைய சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டன. அதன் மூலம், அந்த மூன்று மனித முன்னோடி இனங்களின் உடல்கூறு இடையிலான ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் ஆராயப்பட்டன. விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின்படி, டினிசோவன்களுக்கும், நியாண்டர்தால்களுக்கும் உருவ ஒற்றுமை நிலவினாலும், பல அம்சங்களில் அவர்கள் நவீன மனிதர்களின் உடல்கூறுகளைக் கொண்டிருந்தனர்.
இருந்தாலும், 56 உடல்கூறுகளில் நியாண்டர்தால் மனிதர்களைப் போலவும் இல்லாமல், நவீன மனிதர்களைப் போலவும் இல்லாமல் பிரத்யேக அம்சங்களை டினிசோவன்கள் கொண்டிருந்தனர். அவற்றில் 34 அம்சங்கள் மண்டையோட்டில் மட்டுமே காணப்பட்டன.
டினிசோவன்களின் மண்டையோடு நவீன மனிதர்கள் மற்றும் நியாண்டர்தால் மனிதர்களைவிட அகலமாக இருந்தது.
இந்த ஆய்வின் மூலம், மரபணுக்களின் பரிணாம வளர்ச்சி, எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மனித உடல்கூறு மாற்றங்கள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ள முடிந்தது என்று அந்த அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


