அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி விமானம் ஜெர்மனியில் அவசர தரையிறக்கம்

பிரதமர் மோடி சென்ற விமானம் ஜெர்மனியில் அவசரமாக சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது. 
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி விமானம் ஜெர்மனியில் அவசர தரையிறக்கம்

பிரதமர் நரேந்திர மோடி, 7 நாள் பயணமாக செப்.21-ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். செப்.21-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையிலான இந்தப் பயணத்தின் போது, ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் நடத்தும் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கிறார். நிகழ்ச்சியின் இடையே, இருநாடுகளுக்கிடையேயுள்ள உறவுகள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

அதையடுத்து வரும் 24-ஆம் தேதி  நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி குறித்த சிறப்பு நிகழ்ச்சியை மோடி நடத்துகிறார். இறுதியாக, ஐ.நா. பொதுச் சபையில் வரும் 27-ஆம் தேதி காலை உரையாற்றிய பின்னர் அன்றைக்கு மதியம் அங்கிருந்து நாடு திரும்புகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெர்மனியில் அவசரமாக சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது. ஃப்ராங்ஃப்ரூட் விமானநிலையத்தில் ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் முக்தா தோமர் மற்றும் தூதரக செயலர் பிரதீபா பார்கர் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

சுமார் 2 மணிநேர இடைவேளைக்குப் பின்னர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்ட உடன் பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை மீண்டும் தொடர்ந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com