அமெரிக்க செனட் சபை உறுப்பினரின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்ட மோடி: ஏன் தெரியுமா? 

அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜான் கார்னின்-ன் மனைவியிடம் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்டுக் கொண்ட சம்பவம் நிகழந்துள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்ற மோடி நலமா நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
நியூயார்க்கில் நடைபெற்ற மோடி நலமா நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.

நியூயார்க்: அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜான் கார்னின்-ன் மனைவியிடம் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்டுக் கொண்ட சம்பவம் நிகழந்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் 74}ஆவது ஆண்டுக் கூட்டத்தின் பொது விவாதம் வரும் 24}ஆம் தேதி தொடங்கி 30}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றவிருக்கிறார். இதையொட்டி, ஒரு வார கால அரசுமுறை பயணமாக அவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

இப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக, டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரிலுள்ள என்ஆர்ஜி மைதானத்தில் இந்திய}அமெரிக்கர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்துகொண்ட "மோடி நலமா' (ஹெளடி மோடி) எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தியா, அமெரிக்கா மட்டுமன்றி, உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே மேடையில் உரையாற்றினர்.  இந்தக் கூட்டத்தில் டெக்ஸாஸ் மாகாண உறுப்பினர் ஜான் கார்னினும் கலந்து கொண்டுள்ளார்.

கூட்டம் நிறைவடைந்த பிறகுதான் அன்று ஜான் கார்னின் மனைவிக்கு அன்று பிறந்தநாள் என்ற தகவல் மோடிக்கு தெரிய வந்துள்ளது. அதையடுத்து அவர் ஒரு தகவலை விடியோவில் பதிவுசெய்து ஜான் கார்னின் மனைவிக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

இன்று உங்களுக்கு பிறந்தநாள் ஆனால் உங்கள் கணவர் இங்கு என்னுடனிருக்கிறார்; எனவே உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இயல்பாகவே உங்களுக்கு பொறாமை ஏற்படலாம். ஆனால் நான் உங்களை வாழ்த்துகிறேன்.   உங்களுக்கு இனிய வாழ்க்கை, வளமான மற்றும் அமைதியான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்!

இவ்வாறு மோடி அதில் தெரிவித்திருந்தார். அதற்கு ட்விட்டரில் ஜான் கார்னினும் நன்றி தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com