நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் 12 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அமைச்சரவைக் கூட்டம் அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 27ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக நேபாளத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு மேலும் 12 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் நேபாளத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனைத்துவித வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேபாளத்தில் இந்த வைரஸுக்கு இதுவரை 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் உருவான கரோனா வைரஸுக்கு இதுவரை உலக அளவில் 19 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


