ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

கரோனா: புதிய பணி வாய்ப்புகளை நிறுத்தி வைத்தது கூகுள்

 அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், புதிதாக முழு நேர மற்றும் ஒப்பந்தப் பணி வாய்ப்புகளை உருவாக்குவதை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

News image

google071343

Updated On :24 ஏப்ரல் 2020, 8:01 am


மாஸ்கோ: அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், புதிதாக முழு நேர மற்றும் ஒப்பந்தப் பணி வாய்ப்புகளை உருவாக்குவதை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

வழக்கமாக ஒதுக்கப்படும் சந்தை நிதியை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கூகுள் நிறுவனங்களில் பொதுவான செலவின நிதி குறைப்பு மற்றும் புதிதாக பணி வாய்ப்புகளை ஏற்படுத்துவது நிறுத்திவைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளன.

கரோனா தொற்று பரவல் பெரிய அளவில் பொருளாதா இழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கூகுள் சில முக்கிய முதலீடுகளை இந்த மாத இறுதி வரை நிறுத்திவைக்க திட்டமிட்டிருப்பதாக ஏப்ரல் மாதத் துவக்கத்திலேயே கூகுள் செயல் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.