எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாமல் திணறி வரும் ஜப்பானியர்கள்!

அமெரிக்காவைப் போன்று தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாமல் ஜப்பானியர்கள் திணறி வருகின்றனர்.

News image
Updated On :27 ஏப்ரல் 2020, 11:57 am

DIN

அமெரிக்காவைப் போன்று தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாமல் ஜப்பானியர்கள் திணறி வருகின்றனர்.

உலக அளவில் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பெருமளவில்  பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தாக்கத்தினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இதில் தொழில் நிறுவனங்களுக்கு பெயர்போன ஜப்பானும் விதிவிலக்கல்ல.

கரோனா அச்சத்தினால் அங்கு பணியாளர்கள் அனைவரையும் வீட்டிலிருந்து பணிபுரிய அந்நாட்டு அரசு அறிவுறுத்தி இருந்தது. ஆனால், அங்கு அமெரிக்காவைப் போன்று தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாமல் ஜப்பானியர்கள் திணறி வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 

எலக்ட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ் போன்ற துறைகளில் வளர்ந்துவரும் ஜப்பானியர்கள் வேலைகளை வீட்டிலிருந்து செய்யத் தெரியாமல்/முடியாமல் தவித்து வருகின்றனர். வளரும் நாடுகளிலேயே தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்துள்ள இக்காலத்தில் ஜப்பானில் இன்னும் இ-மெயில் பயன்பாடு இல்லை என்றும் பேக்ஸ் மூலமாகத்தான் முக்கிய செய்திகள்/தகவல்கள் பரிமாறப்படுகின்றன. 

மேலும், ஜப்பானில் ஒரு பெரும்பலாக ஒரு குழுவாகவே இணைந்து வேலை செய்வதால் தற்போது வீட்டில் தனித்து அவர்களால் வேலை செய்ய முடியவில்லை என்று ஆய்வு கூறுகிறது. அங்குள்ள ஒருசில நிறுவனங்கள் வீட்டிலிருந்து எம்மாதிரியான வேலைகளை செய்ய வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.