அபுதாபியில் உள்ள இந்தியன் பள்ளியின் மூத்த ஆசிரியர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளார் என்று அவரது கணவர் வியாழக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரின்சி ராய் மேத்யூ அபுதாபியில் உள்ள இந்தியன் பள்ளியில் மூத்த ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதன் காரணமாகக் கடுமையான சுவாசக் கோளாறு பிரச்னை ஏற்பட்டன. பின்னர், இவரது இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
ஆசிரியரின் கணவர் ராய் மேத்யூ சாமுவேல் மற்றும் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் என் மனைவி கரோனாவால் பலியானது மீளா துயரையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அபுதாபி இந்தியன் பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மின் கற்றல் வகுப்புகளைத் தற்காலிகமாக பள்ளி நிர்வாகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் இந்தியன் பள்ளியின் முதல்வர் நீரஜ் பார்கவா தெரிவித்துள்ளார். ஆங்கிலம் கற்பித்து வந்த ஆசிரியை மிகவும் அன்பானவர். அமைதியும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவார். ஆசிரியை இறந்தது பள்ளிக்கு மிகப்பெரிய இழப்பு.
ஆசிரியருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைத்து இ-கற்றல் வகுப்புகளையும் ஏப்ரல் 30-ம் தேதி வரை நிறுத்திவைக்கப் பட்டுள்ளதாகப் முதல்வர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


