நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் குழுவை உருவாக்க உள்ளது: உலகச் சுகாதார அமைப்பு

புதிய ரக கரோனா வைரசின் தோற்றத்தைக் கூட்டாகக் கண்டறியும்  வகையில், சீன நிபுணர்கள் உள்ளிட்ட சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உருவாக்க உள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு 3ஆம் நாள் தெரிவித்தது. 

News image

கரோனா தொற்றை கண்டறியும் குழுவை உருவாக்க உள்ளது: உலகச் சுகாதார அமைப்பு

Updated On :4 ஆகஸ்ட் 2020, 12:49 pm

DIN

புதிய ரக கரோனா வைரசின் தோற்றத்தைக் கூட்டாகக் கண்டறியும் வகையில், சீன நிபுணர்கள் உள்ளிட்ட சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உருவாக்க உள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு 3ஆம் நாள் தெரிவித்தது. 

கரோனா வைரசின் தோற்றம் உள்ளிட்ட பிரச்னைகளைக் கண்டறியும் பொருட்டு சீனாவுக்கு சென்றுள்ள சிறப்புப் பணிக்குழு தனது ஆயத்தப் பணிகளை முடித்துள்ளது. அதன் அடிப்படையில், சீன நிபுணர்கள் உள்ளிட்ட சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உருவாக்கி ஆராய்ச்சிகளைத் தொடரவுள்ளதாக உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் அதே நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

உலகச் சுகாதார அமைப்பின் அவசரத் திட்டப்பணிக்கான செயல் இயக்குநர் டாக்டார் மைக்கேல் ரியான் 3ஆம் நாள் கரோனா வைரஸ் குறித்த வழமையான கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, சீனாவின் வூஹான் நகரில் சார்ஸ்  நோயை அடையாளம் காணும் சிறப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இதனால், கரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால், இவ்வாறு கூறுவதனால் கரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவிய இடம், வூஹானாக இருக்கும் எனப் பொருள்படாது எனவும் அவர் விளக்கிக் கூறினார். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.