யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அமெரிக்காவில் ஹவாய் நிறுவனத்திற்கு அதிகரிக்கும் கட்டுப்பாடு: டிரம்ப் அரசு

அமெரிக்காவில் சீனாவை சேர்ந்த ஹவாய் நிறுவனத்திற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் மேலும் கடுமையாக்கியுள்ளது.

News image
அமெரிக்க அதிபர்
Updated On :18 ஆகஸ்ட் 2020, 10:17 am

DIN

அமெரிக்காவில் சீனாவை சேர்ந்த ஹவாய் நிறுவனத்திற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் மேலும் கடுமையாக்கியுள்ளது. மேலும் 
அமெரிக்க தொழில்நுட்பத்திற்கான அணுகலை துண்டிப்பதன் மூலம் முக்கிய கூறுகளில் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தக போர் நீடித்து வருகிறது. இதனிடையே சீனாவின் ஹவாய் நிறுவனம் அமெரிக்காவில் உளவுபார்க்கும் வேலையை பார்த்து வருவதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.  உளவு பார்ப்பதன் மூலம் எந்த பலனையும் சீனாவால் அடைய இயலாது என்றும், உளவு பார்க்கும் நிறுவனத்துடன் எதையும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹவாய் நிறுவனத்தின் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தாத வகையில், அமெரிக்க வணிக விதிகளில் ஒருசில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாஷிங்டன்னில் ஹவாய் நிறுவனத்தின் சேவைகளுக்கு கடந்த ஆண்டு முதலே முழுமையாக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.