மாலியில் ராணுவப் புரட்சி: சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் அதிபர்

ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவப் புரட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிபர் இப்ராகிம் கைடா ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் அவரை சிறைபிடித்தனர்.
மாலி முன்னாள் அதிபர் இப்ராகிம் கைடா
மாலி முன்னாள் அதிபர் இப்ராகிம் கைடா
Updated on
1 min read

ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவப் புரட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிபர் இப்ராகிம் கைடா ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் அவரை சிறைபிடித்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஊழல் மற்றும் மோசமான நிர்வாகம் ஆகியவற்றைக் கண்டித்து அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாலி அதிபரை பதவி விலகக்கோரி தீவிரமடைந்த போராட்டத்தில் ராணுவமும் இணைந்தது.

இந்நிலையில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாமாக்கோவில் உள்ள மைய சதுக்கத்தில் ஊடுருவி அப்பகுதியைக் கைப்பற்றினர். அவர்களைத் தடுக்க பிரெஞ்சு படைகள் தலையிட்ட போதும் அந்த முயற்சி தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்த அதிபர் கைடா தொலைக்காட்சியில் தோன்றி தனது ராஜிநாமா அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ராஜிநாமா செய்த கைடாவை ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

கைடா மற்றும் பிற கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com