கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோமாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்? சகோதரிக்கு அதிகாரம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகவும், அவரது சகோதரி கிம் யோ ஜாங்கிடம் அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

News image
கோமாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்? சகோதரிக்கு அதிகாரம்
Updated On :24 ஆகஸ்ட் 2020, 12:54 pm

DIN


வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகவும், அவரது சகோதரி கிம் யோ ஜாங்கிடம் அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் டே-ஜங்கின் முன்னாள் உதவியாளர் சாங் சங்-மின் இந்த தகவலை வெளியிட்டதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிம் கோமாவில் இருப்பதாகவும் ஆனால் அவரது வாழ்க்கை முடிந்துவிடவில்லை என்றும் சாங் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாங்கின் இந்த தகவல், வடகொரியாவின் 36 வயதாகும் அதிபர், தனது அதிகாரத்தை, நெருங்கிய உறவினர் ஒருவருக்கு வழங்கியிருப்பதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு தெரிவித்த சில நாள்களில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.