உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

பாகிஸ்தானில் மேலும் 415 பேருக்கு கரோனா: பாதிப்பு 2,95,053 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று இன்று மேலும் 415 பேருக்குக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2,95,053 ஆக உயர்ந்துள்ளது.

News image

Pak registers 415 more coronavirus cases; tally reaches 295,053

Updated On :28 ஆகஸ்ட் 2020, 6:44 am

PTI

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று இன்று மேலும் 415 பேருக்குக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2,95,053 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

தொற்றுக்கு ஒரே நாளில் 9 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை 6,283 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா பாதித்த 2,79,937 பேர் இதுவரை மீண்டு வந்துள்ளனர். 

சிந்து அதிகபட்சமாக 1,29,081 ஆகவும், பஞ்சாப் 96,636 ஆகவும், கைபர்-பக்துன்க்வா 35,923 ஆகவும், இஸ்லாமாபாத் 15,578 ஆகவும், பலூசிஸ்தான் 12,742 ஆகவும், கில்கிட்-பால்டிஸ்தான் 2,816 ஆகவும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் 2,277 ஆகவும் பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானில் இதுவரை 2,559,261 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.