ஆஸ்திரேலியாவில் புயல்: மூவர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் பிளாக்பர்னில் ஏற்பட்ட புயலால் 4 வயது குழந்தை உள்பட 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
புயலால் சீர்குலைந்த ஆஸ்திரேலியா
புயலால் சீர்குலைந்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் பிளாக்பர்னில் ஏற்பட்ட புயலால் 4 வயது குழந்தை உள்பட 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பிளாக்பர்னில் வியாழக்கிழமை ஏற்பட்ட புயல் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் நகரில் மின்வசதி தடைபட்டது.
சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மரங்கள் சாய்ந்ததால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டின் மீது விழுந்த மரத்தால் அயன் கபூர் என்ற 4 வயது சிறுவன் உள்பட 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மின்சார பாதையில் விரிவான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், முழுவதுமாக மீட்டமைக்க சிறிது காலமாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...