கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சீன நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவு: 18 தொழிலாளர்கள் பலி

சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவின் காரணமாக 18 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :5 டிசம்பர் 2020, 7:57 am

DIN

சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவின் காரணமாக 18 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்கில் 1,800 கி.மீ தொலைவில் உள்ள சோங்கிங் நகரின் டயோஷுய்டோங் சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை கார்பன் மோனாக்சைடு விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாகவும் மேலும் 24 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக இதே சுரங்கத்தில் 2013-இல் நடைபெற்ற விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. சோங்கிங் நிலக்கரி சுரங்கத்தில் தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.