ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பாகிஸ்தான்: வறுமை காரணமாக 5 குழந்தைகளை கால்வாயில் வீசிக் கொன்ற தந்தை

பாகிஸ்தானில் வறுமை காரணமாக தந்தையே 5 குழந்தைகளை கால்வாயில் வீசிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :6 டிசம்பர் 2020, 6:10 pm

DIN

பாகிஸ்தானில் வறுமை காரணமாக தந்தையே 5 குழந்தைகளை கால்வாயில் வீசிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் வசித்து வரும் அந்த நபர் வீட்டில் வறுமை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. 
இதனிடையே இன்று தனது மனைவியுடன் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த அந்த நபர் தன்னுடைய 5 குழந்தைகளை பட்டோகியில் உள்ள ஜம்பர் கால்வாயில் தூக்கி வீசியுள்ளார். 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கால்வாயில் விழுந்த குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 
தற்போது வரை ஒரு வயது அகமத் மற்றும் நான்கு வயது பிஷா ஆகியோரின் சடலங்களை மட்டுமே மீட்டுள்ளனர். 
மேலும் மூன்று குழந்தைகளை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வறுமை காரணமாக தந்தையே தான் பெற்ற 5 குழந்தைகளையும் கால்வாயில் தூக்கி வீசி எரிந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.